Wednesday, 30 December 2015

                        தேர்தல் விவரங்கள் அறிய 

            அன்பு வாசகர்களுக்கு ஜெ.பி யின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் . நாம் தேர்தலை நெறுங்கிக்கொண்டு இருக்கின்றோம் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் நம்மில் பலருக்கு நம் தேர்தல் சார்ந்த விவரங்கள் தெரிவதில்லை . இங்கு தெரியாதவர்களுக்கு என என்னால் முடிந்த பதிவினை செய்கிறேன். epic no என்று சொல்ல படுகின்ற வாக்காளர் அடையாள அட்டை எண் உங்களுக்கு தெரிந்தால் மட்டும் போதும் உங்களுக்கு நான் உதவுவது எளிது.  
          இணைய வசதி கொண்ட மொபைல் அல்லது கனினியில் கூகுல் பகுதிக்கு சென்று 104.211.226.245:8080/EASY/index.doஎன்று டைப் செய்து தேடுதல் பகுதியை சொடுக்கினால் கீழ்க்கணட திரை தோன்றும் 
       மேற்கண்ட பகுதியில் voter என்ற பகுதியில் click செய்தால் கீழ்க்கண்ட திரை உருவாகும்
            அதில் உங்களிடம் உள்ள வாக்காளர் அட்டை அடையாள எண்ணை டைப் செய்து தேடல் கொடுத்தால் அடுத்த வினாடியே உங்கள் சட்ட மன்ற தொகுதி , வரிசை எண், பாகம் எண், வாக்குச்சாவடி இடம் , உங்களின் அனைத்து விவரங்களும் காட்டும். அதில் கடைசியாக உங்கள் மொபைல் எண்ணை புகுத்தினால் இந்த எண்ணை பயன்படுத்திக்க்கொள்ளலாமா ? என்று கேட்ககும் ஆம் என்று கொடுத்த சிரிது நேரத்தில் மீண்டும் உங்கள் விவரங்களை திருத்த விரும்புகின்றீர்களா? எனகேட்கும் ஆம் என்று கொடுத்து விலாசம் பெயர் பிற்ந்த தேதி போன்றவற்றை நீங்களே திருத்தி கீழே upload choose file ல் நீங்கள் திருத்தியதற்கான நகலை இணைக்கவும் அத்துடன் ok கொடுத்து விட்டால் உங்களுக்கான தகவல்கள் அனைத்தும் உங்லளாலே சரி செய்யப்படும் இது புது வித அனுபவமாகவும் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்று நம்புகின்றேன்.. 
மேற்கண்ட படத்தில் உள்ள விவரங்கள் தெரியும்போது அதனை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

ஆன்ராய்டு மொபல் வைத்துக்கொண்டு இருப்பவர்கள் paly store ல் சென்று EASY என்ற அப்ளிகேஷனை download  செய்து மிகவும் எளிதாக பயன்படுத்தலாம் 





உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு 9789252266 என்ற எண்ணிற்கு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை அனுப்பினால் உங்கள்தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும்.
என்றும் அன்புடன்...ஜெ.பி 


மீடியா இனி நீ தேவையா?

  1.          மீடியா  நீ  இனி  தேவையா?

        என் அன்பு வாசகர்களுக்கு ஜெகதலபிரதாபனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்... 
         ஊடகம் பற்றி நாம் சிறு துணுக்குகளை சிந்திப்போம். நம் நீயூட்டனின் மூன்றாம் விதி எதனையும் நடுநிலையோடுதான் அணுகும் என்பது தாங்கள் அறிந்த ஒன்றுதான்..
         ஒவ்வொரு விசைக்கும் எதிர் விசை உண்டு. உலகில் கடவுள் உள்ளார் இல் லை என்பதை பற்றி நாம் சிந்தனைக்கு தெரியும் அது போல சமீப காலமாக இந்த மீடியா தொடைநடுங்கிகள் பற்றியும் நமக்கு இப்போது புரிந்துவிட்டது. மழை வெள்ளத்தில் மக்கள் உயிருக்காகவும் தங்கள் உடைமைக்காவும் கஷ்டப்பட்ட நேரத்தில் ஒரு மீடியாவும் வரவில்லை... ஒரு அரசியல் சமூகவிரோதிகளும் வரவில்லை. காரணம் இங்கு ஜனநாயகம் இறக்கும் தருவாயில் உள்ளது.  
          தோளுறித்துக்காட்ட வேண்டிய ஊடகம் போர்வைக்குள் சுருண்ட காரணம் என்ன?
            இங்கு அச்சடித்த காகிதம் கண்டுபிடித்தவன் மனிதன் இன்று அவனை விட இந்த பணம் சற்று வேகமாக உள்ளது மனிதம் கொன்று எதை வாங்கபோகிறோம் சுயநலம் மட்டுமே கொள்கை என வாழும் சில கேவளவாதிகள் இங்கு இருக்கும்வரை இந்த நிலை மாறாது. களைகளகற்ற நாம் இனி தயாராக வேண்டும்... எந்த அரசியல் கட்சிகள் மக்கள் நலன் மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுமோ அதனை இனி நாம் தேர்ந்தெடுப்போம். ஊடகங்களை புரம் தள்ளுவோம் பிரசுரங்கள் விற்பனை மட்டுமே இன்று உள்ள ஊடகங்களின் நோக்கம் எனத்தெறிந்துவிட்டது.. பணம் என்றால் வாய் திறக்கும் இந்த பிணங்களை நம்பி எந்த பயனும் இல்லை. அனைத்து ஊடகங்களை புறம் தள்ளி ஒரு புத்தகங்களை கூட வாங்காமல் ஊடகவியல் நிபுணர்களுக்கு பாடம் புகட்டுவோம். நாமெல்லாம் தான் ஊடகம் நாம் இல்லையேல் இவர்கள் எல்லாம் வெறும் நாடகம் என்பதனை புரிய வைக்க வார இதழ், நாளிதழ், மாத இதழ் என எல்லாவற்றையும் வாங்காமல் விற்பனையை பின்னுக்கு தள்ளுவோம் அபோதுதான் இந்த உமிழ்நீர் உறிஞ்சிகளுக்கு உரைக்கும்.. மக்கள் இல்லை என்றால் ஏதும் இல்லை இனியாவது உண்மைக்கு குரல்  கொடுப்போம் என்று,... உணரும் தருணம் இதுவன்றோ வேறு இல்லை என் அன்பு புரட்சி இனமே... 

                அரசியல் மாற்றம் அதிகார மாற்றம் புது யுக பொன்னான மாற்றத்திக்கான நேரம் இதுவே புகுத்திடு புது வித ரத்தத்தை உன் உடலில் இனியாவது அது பொதுச்சமுதாயத்திற்கு வித்திட பாயட்டும் தவறு செய்த ஒருவரையும் விட்டு விடாதே உன் மனதை விட ஒரு நல்ல ஆசான் ஒன்று உலகில் இல்லை அதனை கேட்டு உடனே முடிவில் புது வேகம் காட்டு . எதனையும் ஜனநாயக தன்மையோடு அணுகிடு , தனி ஒருவனைக்கண்டு இன்று இந்த அரசு மரியாதை செலுத்துமோ அதுவரை இந்த ஓட்டத்தை நிறுத்தக்கூடாது... அரசியல் சாக்கடை என்று இன்னும் எத்தனை காலத்துக்கு சொல்லி ஏமாறப்போகின்றோம் அதில் கொழுத்த தவளைகள் நாட்டை கூறுபோட்டுக்கொண்டிருக்கிறது. உன் சொத்து என் சொத்து நம் சொத்து என வகை வகையாய் கொள்ளைபோய்க்கொண்டு இருக்கிறது.. ஊழலே இல்லாத ஒரு கட்சி ஊரில் உண்டு என நீ நினைத்தால் அதற்கு அளித்திடு உன் ஆதரவை. 
           எந்த அலுவலகம் சென்று கடமை செய்ய சொன்னாலும் கையூட்டு !!!
இருப்பவன் அள்ளி கொடுப்பான் இல்லாதவன் கதி என்ன இப்படி கண்டும் காணாமல் நம் வேலை முடிந்தால் போதும் என நாம் இருந்ததின் விளைவு இன்று கடமைகே காசு... மிகவும் கேவலம் நாடு இந்த நிலையில் சென்றால் நாம் உட்பட சோமாலியாவில் சோற்றிற்கு கொலை செய்து கொள்ளும் நிலை போல நம் நாடும் மாறிவிடும் என்பதில் ஐயம் இல்லை. 
முகநூல் , வாட்ஸ் ஆப் , ட்விட்டர் போன்ற இணையதள சேவைகள் கொண்டு இங்கு அனைத்து மக்களையும் தொடர்புகொண்டு நமக்கு நாமே ஒரு புது மீடியாவினை இனி உருவாக்கிக்கொள்வோம். லஞ்சம் தவிர்த்து 
நெஞ்சம் நிமிர்த்து.. மாற்றத்தின் விதை விதைக்கப்பட்டுவிட்டது இனி அதைனை அனைவரும் சமத்துவம் நீர் ஊற்றி வளர்க்க முற்படுவோம்..
மீண்டும் நமக்காக ஒரு நல்ல தலைப்பில் நம்மை சந்திக்கும் வரை உங்ளிடம் தற்காளிக விடை பெறுவது ஜெகதலபிரதாபன்...
       

                   “இனி மீடியாக்களை புறக்கணிப்போம்  

                            மாற்றத்தினை நமக்களிப்போம்”





Monday, 28 December 2015

கல்விமுறை பற்றிய விளக்கம்


கற்றல் திறன், தேர்ந்தெடுக்கப் போகும் மேற்படிப்பு, படிக்க நினைக்கும் கல்வி நிறுவனம் என இந்த அம்சங்களின் அடிப்படையில், எந்த சிலபஸ் பள்ளியில் பிள்ளையைச் சேர்க்கலாம் என்ற முடிவை எடுக்கலாம்.

ஸ்டேட் போர்டு

மாநில கல்வித் துறை, நேஷனல் கோர் கரிக்குலம் வரையறைகளின் படி அமைக்கும் பாடத்திட்டத்தை கொண்டது, ஸ்டேட் போர்டு சிலபஸ். பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்விப் பாடத்திட்டமும், பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே வழங்கி வந்த பாடத்திட்டமும் பின்பற்றப்படுகிறது. பாடத்திட்டங்களில் சி.பி.எஸ்.இ சிலபஸில் இருந்து பெரிதாக வேறுபாடு இல்லை. ஆனால், பரீட்சை என்பது மனப்பாடம் செய்யும் திறனை மதிப்பிடுவதாகவே உள்ளது. இதனால் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் ஸ்டேட் போர்டு மாணவர்கள் சரியாக ஸ்கோர் செய்ய முடிவதில்லை.

சி.பி.எஸ்.இ (CBSE)

மத்திய அரசின் நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் டிரெயினிங் (NCERT) பரிந்துரைக்கும் பாடத்திட்டம் இது. இந்த சிலபஸில் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தொடர்ச்சியான தேர்வு முறை (continuous comprehenvive assessment) மூலம் திறன் மதிப்பிடப்படும். பதினொன்றாம் வகுப்பில் ஸ்டேட் போர்டு சிலபஸ் பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமே, பொதுத் தேர்வின் மூலம் சி.ஜி.பி.ஏ-யாக (CGPA – cumulative grade point average) முடிவுகள் வெளியிடப்படும்.

இதன் தேர்வு முறை, மாணவர்களின் புரிதல் மற்றும் யோசிக்கும் திறனுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கும். உதாரணமாக, 10 மார்க் கேள்வியில் 2 மார்க் அனலிடிக்கல் திங்கிங், 2 மார்க் அது சம்பந்தபட்ட ஒரு பிராப்ளம், மீதி 6 மார்க்தான் புத்தகத்தில் இருந்து கேட்கப்படும் கேள்வியாக இருக்கும். இந்தப் பயிற்சி, அவர்களை JEE போன்ற தேசியத் தேர்வுகளை திறம்பட எதிர்கொள்ள வைக்கும். யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கும்கூட இந்த என்.சி.ஈ.ஆர்.டி புத்தகங்கள் அதிக பலன் தருவதாக உள்ளன.

ஐ.சி.எஸ்.இ (ICSE)

‘கவுன்சில் ஃபார் த இந்தியன் ஸ்கூல் சர்டிஃபிகேட்’ என்ற அரசு அல்லாத கல்வி அமைப்பால் நெறிப்படுத்தப்படும் சிலபஸ் இது. இதில் ஏழாம் வகுப்பு வரை தேர்வுகளே இருக்காது. பாடவாரியாகக் கொடுக்கப்படும் வொர்க்்ஷீட்டை மட்டும் மாணவர்கள் செய்தால் போதும். கணக்கு, அறிவியல், மொழிப்பாடங்கள் என அனைத்தும் நாடகங்கள் மற்றும் செயல்முறை விளக்கங்களாக மாணவர்களே செய்து காட்ட வேண்டும்.

எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வுகள் உண்டு. பதினொன்றாம் வகுப்பில் ஸ்டேட் போர்டு, சி.பி.எஸ்.இ போர்டுகள் வழங்கும் பாடப்பிரிவுகளைவிட மிக அதிகமாக, ஆங்கில இலக்கியம், சுற்றுச்சூழல் அறிவியல், சமூகவியல், பொலிட்டிக்கல் சயின்ஸ், ஃபேஷன் டிசைனிங் என 70 பாடப்பிரிவுகளை ஆப்ஷனாக மாணவர்களுக்கு அளிக்கிறது. பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் என்ற வட்டம் விட்டு வந்து, மேற்படிப்புக்கு நிறைய கோர்ஸ் களை தேர்வு செய்ய உதவும் சிலபஸ் இது.

இன்டர்நேஷனல்

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம் வழங்கும் கல்வி மற்றும் தேர்வு முறையைப் பின்பற்ற சான்றிதழ் பெற்றவையே இன்டர்நேஷனல் பள்ளிகள். சென்னையில் கேம்ப்ரிட்ஜ் கல்வியில் படிக்க பிரைமரிக் கான வயது வரம்பு (5 -11 வயது), செகண்டரிக்கான வயது வரம்பு 1 (11-14 வயது), செகண்டரி 2-க்கு (14 -16 வயது), அட்வான்ஸ்ட்க்கு (16 -19 வயது) என நான்கு நிலைகள் உள்ளன. அட்வான்ஸ்டு லெவலில் ஏ.எஸ் லெவல் (ஒரு வருடம்), ஏ லெவல் (இரண்டு வருடம்) என சாய்ஸ் உண்டு. கணிதம், அறிவியல், பொருளாதாரம், ஊடக அறிவியல், ரிலீஜியஸ் ஸ்டடீஸ், சமூகவியல், மரைன் அறிவியல், டிராவல் அண்ட் டூரிசம் உள்ளிட்ட 55 பாடங்களில் இருந்து மாணவர்கள் விரும்பும் பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பிராக்டிக்கல் தேர்வுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த சிலபஸில், மனப்பாடத்துக்கு இடமின்றி அந்தப் பயிற்சியை முழுமை யாகப் புரிந்து செயல்படுத்திக் காட்ட வைப்பதால், மாணவர்களின் சிந்திக்கும் திறனே இங்கு மதிப்பெண் காரணி.

மான்டிசோரி

ப்ரீ பிரைமரி என அழைக்கப்படும் இந்தக் கல்விமுறையில் 1 – 6 வயது வரையுள்ள குழந்தை களின் முழுமையான வளர்ச்சியை மனதில் வைத்து வகுப்புகளும் பாடங்களும் இருக்கும். விளையாட்டு, நாட கங்கள் மூலம் கல்வியைக் கொண்டுசேர்க்கும் இங்கு, பெரும்பாலும் செயல்முறை விளக் கங்கள் மூலமே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

ஒபன் ஸ்கூல்

பல்வேறு காரணங் களால் பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியாத மாணவர்கள், இந்தக் கல்விமுறையைத் தேர்ந்தெடுக்கலாம். செகண்டரி கோர்ஸ் (பத்தாம் வகுப்பு), சீனியர் செகண்டரி கோர்ஸ் (பன்னிரண்டாம் வகுப்பு) என இரு நிலைத் தேர்வுகள் உண்டு. வீட்டிலிருந்தே டிஸ்டன்ஸ் எஜுகேஷன் மூலம் படிப்பதால், தேர்வு களுக்கு மட்டும் சென் றால் போதும்.

இப்படி கல்விச் சந்தையில் பலதரப்பட்ட சிலபஸ்கள் உள்ளன. உயர்நிலை கல்வியிலும் மேற்படிப்பிலும் பொறியியல், மருத்துவம் என்ற வட்டத்துக்குள் அடைக்காமல் மாணவர்களின் விருப்பதுக்கு ஏற்ப பாடங்களைத் தேர்ந்தெடுத்தால், அதில் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி, நல்ல வேலைவாய்ப்புகளை அவர்களே உருவாக்கிக்கொள்ள வழிவகுக்கும்!’’
💕💕💕💕💕💕💕💕💕💕
ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒரு சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் ? என்பதே அந்த சிந்தனை .

மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு அறிவிக்க சொன்னான்

“ வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை” சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான் .

நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள் . ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள் .

நமசிவாய என்றார் ஒருவர் .

ஓம் சக்தி என்றார் மற்றவர் .

உன்னையே நம்பு என்றார் இன்னொருவர்.

ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை .

எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான் , அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை .

இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான் .

அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து “ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்கவேண்டாம்”, பின்னொருநாளில் தங்களை சந்திக்கின்றேன் என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.

மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும் , எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது .

இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான் .

சில வருடங்களுக்குப்பின் . . .

திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.

தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான் .

நாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினான் . தப்பித்து உயிர் பிழைத்த தன்நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன் , தூரத்தில் ஒரு மலையினை கண்டான் .

இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான் .

தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன் , இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான் .

அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை கண்டான்.

உடனே , அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.

“ மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள் , அதுவரை இதனை பார்க்க வேண்டாம்”

இப்போது அதுபோன்ற நிலைதானே அதில் என்னதான் உள்ளது பார்ப்போம் , என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான்.

மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது , அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான் ,

ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .
அந்த வாசகம் இதுதான் . . . .

'இந்த நிலை மாறும்'

அவ்வளவுதான் வேறொன்றும் இல்லை , முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான் .

தான் தற்போது உள்ள நிலை மாறும் , இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான்.

தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான் , கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள் . இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான்.

அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.

மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தவசமானார்கள்.

இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன் , இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான் .

நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது , அரண்மனையில் மக்கள் கூட்டம் , அரியணையில் மன்னன் , அருகில் மகாராணி , மன்னனின் குழந்தைகள் , மந்திரி , பிரதானிகள், ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது .

மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான் , மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.தான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.

மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான் , எனக்கு ஏதும் வேண்டாம் என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன் .மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன் .

இறுதியாக மன்னன் சொன்னான் , அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள் . அந்த மனிதன், மன்னா , “வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் தாங்கள் தற்போது அமர்ந்துள்ளீர்கள் என்பது உண்மைதானே “

மன்னன் : “ஆமாம் அது உண்மைதான் அன்பரே ”

அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன் .

ஏன் என மன்னன் வினவ , எடுத்துப் பாருங்களேன் என்றான் அந்த மனிதன்.

சரி என சொல்லிய மன்னன் , தனது விரலில் இருந்த , மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான். அதில் அந்த மந்திர வாசகம் தெரிந்தது .

'இந்த நிலை மாறும்'

இதுதான் மன்னா வாழ்க்கை , இந்த நிலை மாறும், எனவே எதிலும் கவனமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள் , நான் வருகின்றேன் என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன் .

நெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப்பார்த்து வணங்கி நின்றான் மன்னன்.

இழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன் !

அன்பின் நண்பர்களே , உங்கள் சம்பந்தமான எந்த முடிவினையும் எடுக்கும் உரிமை உங்களுக்கே உள்ளது . சந்தேகம் வேண்டாம் , இதில் வேறு கருத்தில்லை , உங்களின் எந்த முடிவினையும் தடுக்கும் எண்ணமும் எமக்கில்லை . ஆனால் எந்த முடிவெடுக்கும் முன்னரும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்.

'இந்த நிலை மாறும்'

வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம் ....

இன்றைய நாள் இனிதாக அமைய இதயங்கனிந்த வாழ்த்துக்கள்
படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும்..(Ology) -தெரிந்துகொள்வோம்

1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல்
2. Archaeology - தொல்பொருளியல்
3. Astrology - சோதிடவியல் (சோதிடம்)
4. Astrology - வான்குறியியல்
5. Bacteriology பற்றுயிரியல்
6. Biology - உயிரியல்
7. Biotechnology - உயிரித்தொழில்நுட்பவியல்
6. Climatology - காலநிலையியல்
7. Cosmology - பிரபஞ்சவியல்
8. Criminology - குற்றவியல்
9. Cytology - உயிரணுவியல்/ குழியவியல்
10. Dendrology - மரவியல்
11. Desmology - என்பிழையவியல்
12. Dermatology - தோலியல்
13. Ecology - உயிர்ச்சூழலியல்
14. Embryology - முளையவியல்
15. Entomology - பூச்சியியல்
16. Epistemology - அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்
17. Eschatology - இறுதியியல்
18. Ethnology - இனவியல்
19. Ethology - விலங்கு நடத்தையியல்
20. Etiology/ aetiology - நோயேதியல்
21. Etymology - சொற்பிறப்பியல்
22. Futurology - எதிர்காலவியல்
23. Geochronology - புவிக்காலவியல்
24. Glaciology - பனியாற்றியியல்/ பனியியல்
25. Geology - புவியமைப்பியல்/ நிலவியல்
26. Geomorphology - புவிப்புறவுருவியல்
27. Graphology - கையெழுத்தியல்
28. Genealogy - குடிமரபியல்
29. Gynaecology - பெண்ணோயியல்
30. Haematology - குருதியியல்
31. Herpetology - ஊர்வனவியல்
32. Hippology - பரியியல்
33. Histrology - இழையவியல்
34. Hydrology - நீரியல்
35. Ichthyology - மீனியியல்
36. Ideology - கருத்தியல்
37. Information Technology - தகவல் தொழில்நுட்பவியல்
38. Lexicology - சொல்லியல்
39. Linguistic typology - மொழியியற் குறியீட்டியல்
40. Lithology - பாறையுருவியல்
41. Mammology - பாலூட்டியல்
42. Meteorology - வளிமண்டலவியல்
43. Metrology - அளவியல்
44. Microbiology - நுண்ணுயிரியல்
45. Minerology - கனிமவியல்
46. Morphology - உருவியல்
47. Mycology - காளாம்பியியல்
48. Mineralogy - தாதியியல்
49. Myrmecology - எறும்பியல்
50. Mythology - தொன்மவியல்
51. Nephrology - முகிலியல்
52. Neurology - நரம்பியல்
53. Odontology - பல்லியல்
54. Ontology - உளமையியல்
55. Ophthalmology - விழியியல்
56. Ornithology - பறவையியல்
57. Osteology - என்பியல்
58. Otology - செவியியல்
59. Pathology - நொயியல்
60. Pedology - மண்ணியல்
61. Petrology - பாறையியல்
62. Pharmacology - மருந்தியக்கவியல்
63. Penology - தண்டனைவியல்
64. Personality Psychology - ஆளுமை உளவியல்
65. Philology - மொழிவரலாற்றியல்
66. Phonology - ஒலியியல்
67. Psychology - உளவியல்
68. Physiology - உடற்றொழியியல்
69. Radiology - கதிரியல்
70. Seismology - பூகம்பவியல்
71. Semiology - குறியீட்டியல்
72. Sociology - சமூகவியல்
73. Speleology - குகையியல்
74. Sciencology - விஞ்ஞானவியல் (அறிவியல்)
75. Technology - தொழில்நுட்பவியல்
76. Thanatology - இறப்பியல்
77. Theology - இறையியல்
78. Toxicology - நஞ்சியல்
79. Virology - நச்சுநுண்மவியல்
80. Volcanology - எரிமலையியல்
81. Zoology - விலங்கியல்
1.தமிழ் தாத்தா என போற்றப்படுபவர் யார்?
   உ.வே.சா
2.தமிழ் தாத்தா பிறந்த ஊர்?
   உத்தமதானபுரம்
3.உ.வே.சாவின் பெற்றோர் பெயர்?
   தந்தை:வேங்கட சுப்பையர்
   தாய்:  சரசுவதி
4.உ.வே.சா பிறந்த ஆண்டு?
   19-02-1855
5.உ.வே.சா மறைந்த ஆண்டு?
   28-04-1942
6.வள்ளலார் பிறந்த ஆண்டு?
   05-10-1823
7.வள்ளலார் மறைந்த ஆண்டு?
   30-01-1874
8.பாரதியார் பிறந்த ஆண்டு?
   11-12-1882
9.பாரதியார் மறைந்த ஆண்டு?
   11-09-1921
10.இராமலிங்க அடிகளின் பெற்றோர் பெயர்?
   தந்தை : இராமையா
   தாய் : சின்னமையார்
11.அனைத்து மதங்களின் நல்லிணக்கத்திற்காக வள்ளலார் நிறுவிய அமைப்பு?
   சமரச சுத்த சன்மார்க சங்கம்
12.ஏழை மக்களின் பசியை போக்க வள்ளலார் நிறுவிய அமைப்பு?
    சத்திய தரும சாலை
13.ஞான நெறி விளங்க வள்ளலார் நிறுவிய அமைப்பு?
    சத்திய ஞான சபை
14.வள்ளலார் பாடிய பாடல்களின் தொகுப்பு?
    திருவருட்பா
15.திருவருட்பாவில் எத்தனை திருமுறைகள் பாடல்கள் உள்ளன?
    6 திருமுறைகள், 5818 பாடல்கள்
16.அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை எதை போன்றது என வள்ளுவர் கூறுகிறார்?
    பாலை நிலத்தில் காய்ந்த மரம் மீண்டும் துளிர் விடுவது போன்றது
17.அன்புடைமை எனும் அதிகாரம் எப்பால், எந்த இயலில் அமைந்து உள்ளது?
    அறத்துப்பால், இல்லற இயல்
18.தற்போது நிகழும் திருவள்ளுவர் ஆண்டு?
   2046
19.சிறுமி சடகோ சசாகி எந்த நாட்டை சார்ந்தவர்?
  ஜப்பான்
20.சடகோ சசாகி வசித்த நகரம்?
   ஹிரோஷிமா
21.ஜப்பானியர் வணங்கும் பறவை?
  கொக்கு
22.குழந்தைகள் அமைதி நினைவாலயம் அமைந்துள்ள இடம்?
    ஹிரோஷிமா
23.இது எங்கள் கதறல்,இது எங்கள் வேண்டல், உலகத்தில் அமைதி வேண்டும் என்ற தொடர் எங்கு இடம் பெற்றுள்ளது?
   குழந்தைகள் அமைதி நினைவாலயம்
24.சடகோ சசாகி மறைந்த நாள்?
   25-10-1955
25. டென் லிட்டில் பிங்கர்ஸ் என்ற நூலை எழுதியவர்?
    அரவிந்த குப்த்தா
26.ஓலை சுவடியை ஆற்றில் விட்ட நாள்?
    ஆடி பெருக்கு
27. ஆற்றில் விட்ட ஓலை சுவடிகளை உ.வே.சா கண்டெடுத்த இடம்?
    கொடுமுடி, ஈரோடு
28.உ.வே.சா நூலகம் அமைந்துள்ள இடம்
    பெசன்ட்நகர், சென்னை
29.உ.வே.சா நூலகம் அமைக்க பட்ட ஆண்டு?
    1942
30. உ.வே.சா நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு?
    2006
31.ஓலைச் சுவடிகளில் எது இருக்காது?
    புள்ளி இருக்காது,ஒற்றைக் கொம்பு இரட்டை கொம்பு வேறுபாடு இருக்காது
32.ஓலைசுவடி எந்த ஓலையால் ஆனது?
    பனை ஓலை
33.ஓலை சுவடியை பாதுகாக்கும் இடங்கள் எவை?
    1. கீழ்திசை சுவடிகள் நூலகம்-சென்னை
    2. அரசு ஆவண காப்பகம்-சென்னை(1999)
    3.உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-சென்னை(1970)
    4. சரசுவதி மகால் நூலகம்- தஞ்சாவூர்(1918)
34.இந்தியாவில் உள்ள பறவை வகைகளின் எண்ணிக்கை?
   2400
35.உணவு அடிப்படையில் பறவைகளை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
   5வகை
36.அதிக உப்புத்தன்மை உள்ள நீரிலும்,அதிக வெப்பத்திலும் வாழும் ஒரே வகை  பறவை?
   பூ நாரை
37.பறவைகள் பருவ கால மாற்றத்தின் போது இடம் பெயர்தல்?
   வலசை போதல்
38.தமிழகத்தில் பட்டாசு வெடிகாமலும், மேள தாளாம் இல்லாமலும் உள்ள ஒரே சிற்றூர்?
  கூந்தன் குளம்
39.தமிழகத்தில் உள்ள பறவைகள் புகலிடங்களின் எண்ணிக்கை?
   13
40.பழவேற்காடு பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டம்?
   திருவள்ளூர்

Wednesday, 23 December 2015



THANTHAI PERIYAAR..
     TODAY WE LOST THAT LEGEND 

 religious views of Periyar E. V. Ramasamy resulted in him being considered the Voltaire of South India. Both opposed religion virulently because, in their views, the so-called men of religion invented myths and superstitions to keep the innocent and ignorant people in darkness and to go on exploiting them.[1] Periyar has been a harsh critic of the Aryan influenced Hinduism in Tamil Nadu, more than the faiths of Islam, Buddhism and Christianity. He has spoken appreciatively of these other faiths in India finding in their ethics principles of equality and justice, thus advocating them if they can prove an alternative to Brahamanic Hinduism. With regards to institutionalized religion being used for personal gain, Periyar stated that"religion goes hand in hand with superstition and fear. Religion prevents progress and suppresses man. Religion exploits the suppressed classes." As religions, however, they are prone to be hit by accusation of superstition, exploitation and irrationalism....jp
வரலாற்றில் இன்று ( டிசம்பர் 24 )
தந்தை பெரியார்
நினைவு நாள்

* அறிவு மனிதர்கள்
சிந்திக்க வேண்டும்
என்பதற்காகவே தவிர மற்றவர்களை அடிமைப் படுத்த அல்ல என்பதை பெரியார் ஆணித்தரமாக வற்புறுத்தினார்.
*ஆண்டவன் ஆணையே சாதி பேதம் என்றபோது அந்த ஆண்டவன் தேவையில்லை என்றார்.
*இழிவு வேலை என்று எதுவும் இல்லை என்றும்
எந்த வேலையையும் எல்லாரும் செய்ய வேண்டும் என்றார்.
* ஈரோட்டுப்பாதை
மட்டுமே  தமிழர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்ப்படுத்திய பாதை.
* உயர்வு தாழ்வு சாதியில் இல்லை என்பதே பெரியாரின் அசைக்க முடியாத
கொள்கை.
* ஊழ்வினை என்பது உன்னை ஏமாற்ற கண்டுபிடிக்கப்பட்ட
ஓர் ஏமாற்று வார்த்தை என்றார்.
* எல்லாம் அவன் செயல் என்றால் எது உன் செயல் என்று சிந்திக்க வைத்தார்.
* ஏன் எதற்கு எப்படி
என்ற வார்த்தைகள்  அகராதியில் உள்ளது என்பதை
அவரால்தான் தெரிந்து கொண்டோம் .
* அய்யப்படுவது
அறிவின் வளர்ச்சியைக் குறிக்கும் என்றவர்.
* ஒற்றுமையின்றி
இருந்தால் தமிழரின் சுயமரியாதை உணர்வு இல்லாமல் போய்விடும் என்றார்.
* ஓதுதல் ஓதுவித்தல் எல்லாருக்கும் பொதுவானது என்றார்.
* அவ்டதமாய் இருக்கும் அய்யாவின் கொள்கை இனி உலகை ஆள சூளுரைப்போம்.
* ஃ போல் சொன்னால் பகுத்தறிவு சாதிஒழிப்பு தன்மானம் இவைகள் பெரியார் வலியுறுத்தியது.
நகைப்புத்துளி

மூன்று அழகிய 🏽இளம் பெண்களுக்கு ஒரு அலாவுதீன் விளக்கு கிடைத்தது...!
அதை அவர்கள்
தேய்த்ததும் அதில் இருந்து வெளியே வந்த
பூதம் அவர்களிடம் என்ன வேண்டும் என
கேட்டது...!
முதல் பெண்🏽: நான்
இப்பொழுது இருப்பதை
விட பத்து மடங்கு அதிகம் அழகாக வேண்டும்
என்றாள்,,,
உடனே அதிக அழகாகி விட்டாள்...!
இரண்டாவது பெண்🏼: நான்
அவளை விட நூறு
மடங்கு அதிகம் அழகாக வேண்டும் என்றாள்
அவளும்
அழகாகிவிட்டாள். ..!
மூன்றாவது பெண்🏻: நான் இவர்கள் இருவரையும்
விட ஆயிரம் மடங்கு
அதிகமாக வேண்டும் என்றாள்...!
பூதம் யோசித்தது பின்
சரி என்று மாற்றியது....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவள் ஓர் "ஆணாகி"
விட்டாள்...!
""பெண்களை விட ஆயிரம் மடங்கு அழகானவர்களாம் ஆண்கள்....😄😄😄 அன்புடன்  ஜெகதலபிரதாபன்


சிந்தனைத் துளிர்

ஒரு நிறுவனம் .
வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது,
அதன்படி_
நிறைய நபர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்.
அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார வைத்தார்கள்...
அனைவரிடமும் வினாத்தாள்களும்,
விடைத்தாளும் வழங்கப்பட்டது.
இப்பொழுது அந்த நிறுவன மேலாளர் பேசினார்,
இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளது.
உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும்.
அதற்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்.
தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும் என்றார்,
ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது..
நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர்.
நேரம் முடிந்த பின்...
அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர், விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும் நேரம் குறைவாக கொடுத்து விட்டீர்கள், எங்களால் ஐந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை என்றனர்.
அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.
அதன்பின்,
அந்த நிறுவன மேலாளர் சொன்னார்.
விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள் இருவர் மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய தகுதியானவர்கள்.
மற்றவர்கள் வீட்டிற்கு செல்லலாம் என்றார்.
அனைவருக்கும் ஒரே ஆச்சரியம்,
அனைவரும் ஒரு சேர அந்த நிறுவனமேலாளரிடம் கேட்டனர்.
வினாக்களுக்கு சரியான பதிலளித்த எங்களுக்கு வேலை இல்லை என்கிறீர்கள்.
எந்த வினாக்களுக்கும் பதில் அளிக்காத அந்த இருவருக்கு மட்டும் எப்படி வேலை கொடுத்தீர்கள் என்றனர்.
(இந்த இடத்தில் நமக்குள் தோன்றும் கேள்வியும் இதுதான். பதில் அளித்தவர்கள் இருக்க, பதில் அளிக்காதவர்களுக்கு வேலையா? )
அதற்கு அந்த மேலாளர் சொன்னார்,
எல்லோரும் அந்த பத்தாவது கேள்வியை படித்துப் பாருங்கள்,
படித்துப் பார்த்த அனைவரும் பதிலேதும் பேச முடியாமல் வீட்டிற்கு சென்றனர்,
அந்த பத்தாவது கேள்வி இது தான்..
10) மேற்கண்ட எந்த வினாக்களுக்கும் நீங்கள் பதில் அளிக்க வேண்டாம் என்பதாகும்.
இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல.
நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்,
இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும் படித்திருந்தால் வேலை நிச்சயம் கிடைத்திருக்கும் அல்லவா?
சிந்தனைக்கு :
இந்த நவீன யுகத்தில் பிள்ளைகளை படி படி என்று படிக்கச் சொல்லி நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர,
நம் பிள்ளைகள் நல்ல புத்திசாலியாக வளர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை.
அன்புடன் ஜெகதலபிரதாபன்

                      மூன்றாம்  அரசியல் போர்- 2016

அனைவருக்கும் வணக்கம் !
       நான் இன்று நம் தமிழ்நாட்டின்  அரசியல் பற்றி சிறு அலசல் செய்யலாம் என விரும்பினேன் அதனால் அதனைப்பற்றி என்னுடைய கருத்துக்கள் உங்களுக்காக மன்னிக்கவும் நமக்காக...


 யார் அடுத்தது ????????????????

      தொன்றுதொட்டு நம் நாட்டில் ஒரு கலாச்சாரம் அரசியல் என்றால் அது சினிமா துறையில் கால் பதித்து பின் அரசியலுக்கு வருவது.  தமிழ் நாட்டை பொறுத்தமட்டில் இரு கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்து வருவது அனைவரும் அறிந்ததே. எதனால் இந்த நிலை மாறவில்லை என்றால் நமக்கு நன்றாகவே தெரியும் யாரும் இரண்டு கட்சிகளை தாண்டி திறம் படைத்தவர்கள் இல்லை என்று, ஆனால் அது உண்மை அல்ல . இவர்களைத்தாண்டி திறம் பெற்றவர்கள் இங்கு உள்ளனர், அவர்கள் யார்? சாதியின் அடிப்படையில் சந்துக்கு தெருவுக்கு ஒரு கொடி கம்பம் நட்டு சாதி மதத்தின் அடிப்படையில் பிரிவினை மட்டுமே ஆயுதமாக கொண்டு ஓட்டு வங்கிகளை நிரப்பும் அனேகர் நம் நாட்டில் உண்டு. ஆனால் அவர்களால் இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஆட்சி பிடிக்க இயலாது பணம் சம்பாதிக்க சில இடங்கள் வேண்டுமானால் பிடிக்கலாம் அதும் மக்கள் மனதில் சாதி மத வெறி தூண்டி.
          சமத்துவம் சகோதரத்துவம் தெரியாத எவறாலும் ஆட்சி பீடம் பிடிப்பது அரிதான செயல். சரி எப்படி இந்த நிலை மாற்றுவது , இன்றைய நிலையில் மக்கள் தெளிவாக உள்ளனர். தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.
எங்கு பார்த்தாலும் கடமை செய்ய லஞ்சம் மலிந்துவிட்டது என நம்மில் அனைவருக்குமே உண்ர்வுப்பூர்வமாகவே தெறிகின்றது. இதில் ஆளும் கட்சியோ அல்லது எதிர் கட்சிக்கோ பெருத்த பங்கு உள்ளது என நான் கூறவில்லை யார் யாருக்கு எவ்வளவு பங்கு உள்ளதா இல்லையா என்பதும் தாங்கள் அறிந்ததே.
      டெல்லியில் பெரிய மாற்றம் அரசியலில் அதே மாற்றம் தமிழ் நாட்டிலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது . பல்வேறு பெரிய கல்விப்பெருந்தகைகளை உருவாக்கி கொண்டு இருக்கும் தமிழ்நாட்டில் திறமையற்றவர்களா இருப்பார்கள்? சாதி வெறி, மதம் வெறி, ஊழல், போன்ற சமூக அழுக்குகளை நீக்க சாமன்ய மக்களில் ஒருவரையும் நம் சமூகம் விட்டு வைப்பதில்லை.
ஏதாவது ஒரு வழியில் ஊழல் ஆசையை புகுத்தி அவன் மேல் அசிங்கம் கலங்கம் உண்டாக்கிவிடுகின்றது. அவர்களும் அதே சாக்கடையில் பணத்திற்கு ஆசைப்பட்டு அடிமைகளாகவும் அடங்கிப்போய் விடுகின்றார்கள்.
        கஷ்டங்கள் மத்தியில் பயணம் செய்து நேர்மையானா முறையில் மக்களுக்கு தொண்டு செய்ய துணிவுள்ளம் படைத்தவர்கள் எத்தனைபேர் உள்ளனர்.விரல் விட்டு எண்ணிவிட முடியும் இதுபோன்ற ஏகலைவன்களை
அவர்களில் நாம்  அடையாளம் கண்டு களம் இறக்குவோம் தருணம் இதுவென்று அறிவாயோ என் தமிழிச்சமுகமே. சுரண்டியவர் கூட்டம் மிரண்டு ஓட 2016ம் ஆண்டில் மூன்றாம் அரசியல் போர் உருவாகப்போகின்றது . இன்னும் சில நாட்களில் அதற்கான் புரட்சி வெடிக்கும் மாற்றங்கள் காற்றிலே பரவும் அப்போது யார் அந்த மாற்றத்தின் விடிவெள்ளி என நீங்களே புரிந்து அதற்கு உறுதுணையாய் இருப்பீர்கள் ....
”ஒரே ஒரு வாக்கு அதனை கொண்டு மாற்றதினை உருவாக்கு”
மீண்டும் ஒரு தலைப்பில் சந்திப்பேன் 
                                                 அன்புடன்....ஜெகதலபிரதாபன்

Monday, 21 December 2015

               லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து

                                                             திரு.சகாயம்.I.AS


       மனிதம் வளர்க்க புறப்பட தயார்நிலையில் இருப்போம் திரு.சகாயம் ஐயா அவர்களை அரசியல் முதல் பிரமுகராக முன் நிறுத்தி புது புரட்சியை உண்டாக்குவோம்.
ஊழல் ஒழிக்க தலைவன் வேண்டும் திறமை வேண்டும் இவை அனைத்தும் ஒருங்கே பெற்ற ஒருவன் இருக்கின்றான் என்று தெறிந்தும் உறக்கமே வேலை என்று இருந்தால் இனி ஊர் காக்க புறப்பட யாரும் இருக்கமாட்டார்கள்.

      அரசு எந்திரம் சுழல அதிக லஞ்சம் தேவையோ? இனி கடமை செய்ய கையூட்டிற்கு நீட்டும் கைகள் துண்டிக்கப்பட வேண்டும். உண்மைக்கு உறுதுணையாய் இருந்ததால் மட்டுமே ஊர் ஊராய் பணிமாற்றம் செய்தது சகாயம் ஐயா அவர்களை இன்று அதுவே அவருக்கு உறுதுணையாய் போனது, இலவசங்கள் ஒழிய வேண்டும், சாதி மதம் பழிக்க வேண்டும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் . எல்லோரும் நம்மவர்களே என்ற ஒறுமித்த சத்தம் உலகிற்கே கேட்க வேண்டும்.

        வாய்ப்பு நமக்கு கிடைத்தால் அதனை மற்றவருக்கு கொடுக்க மறத்தல் கூடாது . புதிய வழி மறுத்தலும் கூடாது. அரசு சொத்துக்கள் அனைத்துமே அசிங்கமாக தெரிகிறது . ம்ருத்துவமனை ,பேருந்து, பள்ளி கட்டிடம், பாதைகள்,   என அனைத்துமே பாழாய் போனதுதான் மிச்சம். நாம் யாருக்கும் பின்னோடியாய் இல்லாமல் இருக்க திரு, சகாயம் . ஐயா அவர்களை முன்நிறுத்துவோம்...

 “மாற்றிட நீ புறப்படுவாய் என்றால் இங்கு மாறிட அனைத்தும் தயார்”
        
                         என்றும் அன்புடன்.....ந.ஜெகதலபிரதாபன்..
pnjagan66@gmail.com
அன்புள்ள மனிதர்களே
மரங்கள் எல்லாமே தருகிறது நமக்கு 
நாம் மரத்திற்கு என்ன தந்தோம் ..
அழிக்கத்தான் நினைக்கின்றோம்
சிலர் வளர்த்து விடுகிறார்கள்
மதம்! சாதியை...
வளர்க்கத்தான் நினைக்கிறோம்
பலர் அழித்து விடுகிறார்கள் 
மரத்தை....! 
மரம் வளர்ப்போம்  
மதி பெறுவோம்....ஜெ.பி