Monday, 21 December 2015

               லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து

                                                             திரு.சகாயம்.I.AS


       மனிதம் வளர்க்க புறப்பட தயார்நிலையில் இருப்போம் திரு.சகாயம் ஐயா அவர்களை அரசியல் முதல் பிரமுகராக முன் நிறுத்தி புது புரட்சியை உண்டாக்குவோம்.
ஊழல் ஒழிக்க தலைவன் வேண்டும் திறமை வேண்டும் இவை அனைத்தும் ஒருங்கே பெற்ற ஒருவன் இருக்கின்றான் என்று தெறிந்தும் உறக்கமே வேலை என்று இருந்தால் இனி ஊர் காக்க புறப்பட யாரும் இருக்கமாட்டார்கள்.

      அரசு எந்திரம் சுழல அதிக லஞ்சம் தேவையோ? இனி கடமை செய்ய கையூட்டிற்கு நீட்டும் கைகள் துண்டிக்கப்பட வேண்டும். உண்மைக்கு உறுதுணையாய் இருந்ததால் மட்டுமே ஊர் ஊராய் பணிமாற்றம் செய்தது சகாயம் ஐயா அவர்களை இன்று அதுவே அவருக்கு உறுதுணையாய் போனது, இலவசங்கள் ஒழிய வேண்டும், சாதி மதம் பழிக்க வேண்டும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் . எல்லோரும் நம்மவர்களே என்ற ஒறுமித்த சத்தம் உலகிற்கே கேட்க வேண்டும்.

        வாய்ப்பு நமக்கு கிடைத்தால் அதனை மற்றவருக்கு கொடுக்க மறத்தல் கூடாது . புதிய வழி மறுத்தலும் கூடாது. அரசு சொத்துக்கள் அனைத்துமே அசிங்கமாக தெரிகிறது . ம்ருத்துவமனை ,பேருந்து, பள்ளி கட்டிடம், பாதைகள்,   என அனைத்துமே பாழாய் போனதுதான் மிச்சம். நாம் யாருக்கும் பின்னோடியாய் இல்லாமல் இருக்க திரு, சகாயம் . ஐயா அவர்களை முன்நிறுத்துவோம்...

 “மாற்றிட நீ புறப்படுவாய் என்றால் இங்கு மாறிட அனைத்தும் தயார்”
        
                         என்றும் அன்புடன்.....ந.ஜெகதலபிரதாபன்..
pnjagan66@gmail.com

No comments:

Post a Comment