Wednesday, 30 December 2015

மீடியா இனி நீ தேவையா?

  1.          மீடியா  நீ  இனி  தேவையா?

        என் அன்பு வாசகர்களுக்கு ஜெகதலபிரதாபனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்... 
         ஊடகம் பற்றி நாம் சிறு துணுக்குகளை சிந்திப்போம். நம் நீயூட்டனின் மூன்றாம் விதி எதனையும் நடுநிலையோடுதான் அணுகும் என்பது தாங்கள் அறிந்த ஒன்றுதான்..
         ஒவ்வொரு விசைக்கும் எதிர் விசை உண்டு. உலகில் கடவுள் உள்ளார் இல் லை என்பதை பற்றி நாம் சிந்தனைக்கு தெரியும் அது போல சமீப காலமாக இந்த மீடியா தொடைநடுங்கிகள் பற்றியும் நமக்கு இப்போது புரிந்துவிட்டது. மழை வெள்ளத்தில் மக்கள் உயிருக்காகவும் தங்கள் உடைமைக்காவும் கஷ்டப்பட்ட நேரத்தில் ஒரு மீடியாவும் வரவில்லை... ஒரு அரசியல் சமூகவிரோதிகளும் வரவில்லை. காரணம் இங்கு ஜனநாயகம் இறக்கும் தருவாயில் உள்ளது.  
          தோளுறித்துக்காட்ட வேண்டிய ஊடகம் போர்வைக்குள் சுருண்ட காரணம் என்ன?
            இங்கு அச்சடித்த காகிதம் கண்டுபிடித்தவன் மனிதன் இன்று அவனை விட இந்த பணம் சற்று வேகமாக உள்ளது மனிதம் கொன்று எதை வாங்கபோகிறோம் சுயநலம் மட்டுமே கொள்கை என வாழும் சில கேவளவாதிகள் இங்கு இருக்கும்வரை இந்த நிலை மாறாது. களைகளகற்ற நாம் இனி தயாராக வேண்டும்... எந்த அரசியல் கட்சிகள் மக்கள் நலன் மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுமோ அதனை இனி நாம் தேர்ந்தெடுப்போம். ஊடகங்களை புரம் தள்ளுவோம் பிரசுரங்கள் விற்பனை மட்டுமே இன்று உள்ள ஊடகங்களின் நோக்கம் எனத்தெறிந்துவிட்டது.. பணம் என்றால் வாய் திறக்கும் இந்த பிணங்களை நம்பி எந்த பயனும் இல்லை. அனைத்து ஊடகங்களை புறம் தள்ளி ஒரு புத்தகங்களை கூட வாங்காமல் ஊடகவியல் நிபுணர்களுக்கு பாடம் புகட்டுவோம். நாமெல்லாம் தான் ஊடகம் நாம் இல்லையேல் இவர்கள் எல்லாம் வெறும் நாடகம் என்பதனை புரிய வைக்க வார இதழ், நாளிதழ், மாத இதழ் என எல்லாவற்றையும் வாங்காமல் விற்பனையை பின்னுக்கு தள்ளுவோம் அபோதுதான் இந்த உமிழ்நீர் உறிஞ்சிகளுக்கு உரைக்கும்.. மக்கள் இல்லை என்றால் ஏதும் இல்லை இனியாவது உண்மைக்கு குரல்  கொடுப்போம் என்று,... உணரும் தருணம் இதுவன்றோ வேறு இல்லை என் அன்பு புரட்சி இனமே... 

                அரசியல் மாற்றம் அதிகார மாற்றம் புது யுக பொன்னான மாற்றத்திக்கான நேரம் இதுவே புகுத்திடு புது வித ரத்தத்தை உன் உடலில் இனியாவது அது பொதுச்சமுதாயத்திற்கு வித்திட பாயட்டும் தவறு செய்த ஒருவரையும் விட்டு விடாதே உன் மனதை விட ஒரு நல்ல ஆசான் ஒன்று உலகில் இல்லை அதனை கேட்டு உடனே முடிவில் புது வேகம் காட்டு . எதனையும் ஜனநாயக தன்மையோடு அணுகிடு , தனி ஒருவனைக்கண்டு இன்று இந்த அரசு மரியாதை செலுத்துமோ அதுவரை இந்த ஓட்டத்தை நிறுத்தக்கூடாது... அரசியல் சாக்கடை என்று இன்னும் எத்தனை காலத்துக்கு சொல்லி ஏமாறப்போகின்றோம் அதில் கொழுத்த தவளைகள் நாட்டை கூறுபோட்டுக்கொண்டிருக்கிறது. உன் சொத்து என் சொத்து நம் சொத்து என வகை வகையாய் கொள்ளைபோய்க்கொண்டு இருக்கிறது.. ஊழலே இல்லாத ஒரு கட்சி ஊரில் உண்டு என நீ நினைத்தால் அதற்கு அளித்திடு உன் ஆதரவை. 
           எந்த அலுவலகம் சென்று கடமை செய்ய சொன்னாலும் கையூட்டு !!!
இருப்பவன் அள்ளி கொடுப்பான் இல்லாதவன் கதி என்ன இப்படி கண்டும் காணாமல் நம் வேலை முடிந்தால் போதும் என நாம் இருந்ததின் விளைவு இன்று கடமைகே காசு... மிகவும் கேவலம் நாடு இந்த நிலையில் சென்றால் நாம் உட்பட சோமாலியாவில் சோற்றிற்கு கொலை செய்து கொள்ளும் நிலை போல நம் நாடும் மாறிவிடும் என்பதில் ஐயம் இல்லை. 
முகநூல் , வாட்ஸ் ஆப் , ட்விட்டர் போன்ற இணையதள சேவைகள் கொண்டு இங்கு அனைத்து மக்களையும் தொடர்புகொண்டு நமக்கு நாமே ஒரு புது மீடியாவினை இனி உருவாக்கிக்கொள்வோம். லஞ்சம் தவிர்த்து 
நெஞ்சம் நிமிர்த்து.. மாற்றத்தின் விதை விதைக்கப்பட்டுவிட்டது இனி அதைனை அனைவரும் சமத்துவம் நீர் ஊற்றி வளர்க்க முற்படுவோம்..
மீண்டும் நமக்காக ஒரு நல்ல தலைப்பில் நம்மை சந்திக்கும் வரை உங்ளிடம் தற்காளிக விடை பெறுவது ஜெகதலபிரதாபன்...
       

                   “இனி மீடியாக்களை புறக்கணிப்போம்  

                            மாற்றத்தினை நமக்களிப்போம்”





No comments:

Post a Comment