மூன்றாம் அரசியல் போர்- 2016
அனைவருக்கும் வணக்கம் !நான் இன்று நம் தமிழ்நாட்டின் அரசியல் பற்றி சிறு அலசல் செய்யலாம் என விரும்பினேன் அதனால் அதனைப்பற்றி என்னுடைய கருத்துக்கள் உங்களுக்காக மன்னிக்கவும் நமக்காக...
தொன்றுதொட்டு நம் நாட்டில் ஒரு கலாச்சாரம் அரசியல் என்றால் அது சினிமா துறையில் கால் பதித்து பின் அரசியலுக்கு வருவது. தமிழ் நாட்டை பொறுத்தமட்டில் இரு கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்து வருவது அனைவரும் அறிந்ததே. எதனால் இந்த நிலை மாறவில்லை என்றால் நமக்கு நன்றாகவே தெரியும் யாரும் இரண்டு கட்சிகளை தாண்டி திறம் படைத்தவர்கள் இல்லை என்று, ஆனால் அது உண்மை அல்ல . இவர்களைத்தாண்டி திறம் பெற்றவர்கள் இங்கு உள்ளனர், அவர்கள் யார்? சாதியின் அடிப்படையில் சந்துக்கு தெருவுக்கு ஒரு கொடி கம்பம் நட்டு சாதி மதத்தின் அடிப்படையில் பிரிவினை மட்டுமே ஆயுதமாக கொண்டு ஓட்டு வங்கிகளை நிரப்பும் அனேகர் நம் நாட்டில் உண்டு. ஆனால் அவர்களால் இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஆட்சி பிடிக்க இயலாது பணம் சம்பாதிக்க சில இடங்கள் வேண்டுமானால் பிடிக்கலாம் அதும் மக்கள் மனதில் சாதி மத வெறி தூண்டி.
சமத்துவம் சகோதரத்துவம் தெரியாத எவறாலும் ஆட்சி பீடம் பிடிப்பது அரிதான செயல். சரி எப்படி இந்த நிலை மாற்றுவது , இன்றைய நிலையில் மக்கள் தெளிவாக உள்ளனர். தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.
எங்கு பார்த்தாலும் கடமை செய்ய லஞ்சம் மலிந்துவிட்டது என நம்மில் அனைவருக்குமே உண்ர்வுப்பூர்வமாகவே தெறிகின்றது. இதில் ஆளும் கட்சியோ அல்லது எதிர் கட்சிக்கோ பெருத்த பங்கு உள்ளது என நான் கூறவில்லை யார் யாருக்கு எவ்வளவு பங்கு உள்ளதா இல்லையா என்பதும் தாங்கள் அறிந்ததே.
டெல்லியில் பெரிய மாற்றம் அரசியலில் அதே மாற்றம் தமிழ் நாட்டிலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது . பல்வேறு பெரிய கல்விப்பெருந்தகைகளை உருவாக்கி கொண்டு இருக்கும் தமிழ்நாட்டில் திறமையற்றவர்களா இருப்பார்கள்? சாதி வெறி, மதம் வெறி, ஊழல், போன்ற சமூக அழுக்குகளை நீக்க சாமன்ய மக்களில் ஒருவரையும் நம் சமூகம் விட்டு வைப்பதில்லை.
ஏதாவது ஒரு வழியில் ஊழல் ஆசையை புகுத்தி அவன் மேல் அசிங்கம் கலங்கம் உண்டாக்கிவிடுகின்றது. அவர்களும் அதே சாக்கடையில் பணத்திற்கு ஆசைப்பட்டு அடிமைகளாகவும் அடங்கிப்போய் விடுகின்றார்கள்.
கஷ்டங்கள் மத்தியில் பயணம் செய்து நேர்மையானா முறையில் மக்களுக்கு தொண்டு செய்ய துணிவுள்ளம் படைத்தவர்கள் எத்தனைபேர் உள்ளனர்.விரல் விட்டு எண்ணிவிட முடியும் இதுபோன்ற ஏகலைவன்களை
அவர்களில் நாம் அடையாளம் கண்டு களம் இறக்குவோம் தருணம் இதுவென்று அறிவாயோ என் தமிழிச்சமுகமே. சுரண்டியவர் கூட்டம் மிரண்டு ஓட 2016ம் ஆண்டில் மூன்றாம் அரசியல் போர் உருவாகப்போகின்றது . இன்னும் சில நாட்களில் அதற்கான் புரட்சி வெடிக்கும் மாற்றங்கள் காற்றிலே பரவும் அப்போது யார் அந்த மாற்றத்தின் விடிவெள்ளி என நீங்களே புரிந்து அதற்கு உறுதுணையாய் இருப்பீர்கள் ....
”ஒரே ஒரு வாக்கு அதனை கொண்டு மாற்றதினை உருவாக்கு”
மீண்டும் ஒரு தலைப்பில் சந்திப்பேன்
அன்புடன்....ஜெகதலபிரதாபன்
No comments:
Post a Comment